Viral Video : மணமகனின் தலையில் தேங்காய் உடைப்பு.. வித்தியாசமான முறையில் நடக்கும் திருமண சடங்கு!
Viral Wedding Video : திருமண விழாவில், மணமகனின் தலையில் பச்சை தேங்காயை உடைக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், உரிக்கப்படாத தேங்காய் மணமகனின் தலையில் பல முறை அடிக்கப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய சடங்கா அல்லது வன்முறைச் செயலா என்பது குறித்து நெட்டிசன்கள் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வைரல் திருமண வீடியோ
திருமணம் (Marriage) என்றாலே பலவித சடங்குகள், சம்பிரதாயங்கள் (Rituals and amulets) என பல விஷயங்கள் அடங்கியுள்ளது. மேலும் இப்போதுள்ள திருமணங்கள் வெறும் 3 நாட்களில் ஒரு சில நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது. ஆனால் ஒரு சிலர் ஹல்தி , சங்கித், பேச்சுலர் பார்ட்டி (Haldi, Sangeet, Bachelor Party) அதை தொடர்ந்து திருமணம், திருமண வரவேற்பு என ஒரு திருமண நிகழ்ச்சியை ஒரு வாரமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மணமகன் போல் ஆடையணிந்து இருக்கும் நபரின் தலையில் (head) தேங்காயை (Unpeeled coconut) உடைக்கும் காட்சியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் நபர் ஒருவர் தேங்காயை மணமகனை போல இருக்கும் நபரின் தலையில் ஓங்கி உடைக்கிறார். தொடர்ந்து நான்கு முதல் ஐந்து முறை தேங்காய்யை பலமாக மண்டையில் உடைக்கிறார். தலையில் அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் அந்த நபரின் தலை கீழே குனிந்துகொண்டே போகிறது.
நல்லவேளை அந்த தேங்காய் 5 அடியில் உடைந்து விடுகிறது. இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும். தேங்காய் உடைத்தவுடன் மணமகன் வேகமாக எழுந்தது செல்வது போல் இந்த வீடியோவில் இருக்கிறது. தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. குறிப்பாக பல்வேறு இணையவாசிகள் வீடியோவை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஒரு திருமண சடங்கில் இப்படி ஒரு விஷயமா என ஷாக் ஆகியுள்ளனர்.
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :
ఇలాంటి ఆచారాలు గలవాళ్ళని వెతికి వాళ్ళ అమ్మాయిని మన @GoCoronaGo కి ఇచ్చి పెళ్ళి చెయ్యండి @geetha_happy2 @RaniBobba @DEVISireeha pic.twitter.com/IQL5hw5q5S
— Satya ™️ (@MSD_Prabhasatya) April 27, 2025
இந்த வைரல் வீடியோவில், ஒரு மண்டபத்தில், மணமகனைப் போல உடையணிந்த ஒருவரின் தலையில் தேங்காய் உடைக்கிறார்கள். ஆனால் அவரும் எந்த ரியாக்ஷ்னும் காட்டாமல் அங்கேயே அமர்ந்திருந்தார். எதிரே இருந்த நபர் தேங்காய் வைத்து அந்த நபரின் தலையில் திரும்பத் திரும்ப அடித்துக் கொண்டே இருந்தார். தலையில் அடிவாங்கும் அந்த மணமகனைப் போல் இருப்பவரும் கண்களை மூடிக்கொண்டு மசாஜ் செய்து கொள்வது போல அமைதியாக அமர்ந்திருந்தார். எந்த வித சாய்வும் இல்லாமல் இருந்தார், தேங்காய் அடைந்தவுடன் வேகமாக முன்னோக்கி எழுந்து சென்றார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது இந்த மாதிரியான சடங்கு எங்கு நடக்கிறது என பலரும் கேட்டு வருகின்றனர்.
வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :
இந்த் வீடியோவின் கீழ் பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர், அதில் சில கருத்துக்களைப் பார்க்கலாம். இதில் முதல் நபர் ஒருவர் ” இது எந்தவிதமான சம்பிரதாயம், இப்படி தேங்காயைக் கொண்டு அடித்தால் அவருக்குச் சொர்க்கம் நிச்சயம் என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் அய்யயோ தேங்காயைக் கொண்டு இப்படி அடிக்கிறார். ஆனால் அவர் அசையவில்லையே, இது போலியான வீடியோவாக இருக்குமோ என்று கூறியுள்ளார்.