Shruti Haasan : உங்களின் காதலர் யார் ? ரசிகர் கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் கொடுத்த நச் பதில்!
Shruti Haasan Answers A Fans Questions : தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருபவர் ஸ்ருதி ஹாசன். நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகளான இவர் ரஜினியின் கூலி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் உங்களின் காதலர் யார் என்ற கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் கூறிய பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ருதி ஹாசன்
தனது சிறுவயதிலே தந்தையின் படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்தவர் ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) . குழந்தை நட்சத்திரமாக நுழைந்த இவர், தமிழில் சில படங்களில் பாடலும் பாடியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பாடல் மற்றும் இசையின் மீது ஆர்வம் அதிகமாகி வெளிநாட்டில் சென்று அதற்கான படிப்பையும் படித்தார். அதைத் தொடர்ந்து சினிமாவில் கதாநாயகியாக விரும்பிய ஸ்ருதி ஹாசன், பாலிவுட்டில் (Bollywood) முக்கிய ரோலில் நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார். அதைத் தொடர்ந்து தமிழில் நடிகர் சூர்யாவின் (Suriya) 7ஆம் அறிவு ( 7 aum Arivu) என்ற படத்தில் நடித்து தமிழ் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தைத் தொடர்ந்து இவருக்குத் தமிழில் பல வெற்றி படங்கள் அமைந்தது. இவர் தமிழில் விஜய் (Vijay), சூர்யா, தனுஷ், அஜித் மற்றும் பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துப் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவை கடந்து தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஆர்வம் கட்டி வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்து வந்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் உங்களின் தற்போதைய காதலன் யார் ? என்று கேட்டிருந்தார்.
அதற்கு நடிகை ஸ்ருதி ஹாசன் அளித்திருந்த பதில் பலரையும் யோசிக்க வைத்துள்ளது. அதில் அவர் என்ன கூறியிருந்தார் தெரியுமா? நடிகை ஸ்ருதி ஹாசன் “நான் தற்போது என்னைக் காதலிக்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த விஷயமானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.
நடிகை ஸ்ருதி ஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு :
நடிகை ஸ்ருதி ஹாசன், சில ஆண்டுகளுக்கு முன் மும்பையைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து வருவதாகக் கூறப்பட்டு வந்தது. அவருடன் நடிகை ஸ்ருதி ஹாசனும் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். மேலும் சில மாதங்களுக்கு முன் அவருடன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் எனப் பலவற்றையும் அவரின் இன்ஸ்டாகிராம் தளத்திலிருந்து நீக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் பிரேக் அப் செய்துவிட்டார் என்றும் கூறப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் அளித்த பதிலானது அதை உறுதி செய்துள்ளது.
கூலி திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் :
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் கூலி. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் பான் இந்திய பிரபலங்கள் நாகார்ஜுனா, உபேந்திர ராவ் மற்றும் பாலிவுட் பிரபல அமீர்கான் என முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கும் முதல் படமாகும். இந்த படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் மிகவும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தெலுங்கில் நடிகர் பிரபாஸின் சலார் 2 படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.