மொபைலில் இண்டர்நெட் வேகம் குறைவாக உள்ளதா?.. இந்தடிப்ஸ்களை பின்பற்றுங்கள்!
Smartphone : ஸ்மார்ட்போன் பயன்பாடு எவ்வாறு பொதுமக்களின் வாழ்வின் அங்கமாக உள்ளதோ அதே அளவுக்கு, இணைய சேவையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இணையதளம் இல்லாமல் ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியாத நிலையில், ஸ்மார்ட்போனில் ஏற்படும் நெட்வொர்க் கோளாறு காரணமாக சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

மாதிரி புகைப்படம்
தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன்களின் (Smartphone) பயன்பாடு அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைவரும் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான மக்களின் நாள் தொடங்குவது முதல் முடிவது வரை என ஸ்மார்ட்போன் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்மார்ட்போன் பயன்பாடு எவ்வாறு பொதுமக்களின் வாழ்வின் அங்கமாக உள்ளதோ அதே அளவுக்கு, இணைய சேவையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இணையதளம் இல்லாமல் ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியாத நிலையில், ஸ்மார்ட்போனில் ஏற்படும் நெட்வொர்க் கோளாறு காரணமாக சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
நெட்வொர்க் சிக்கலால் ஏற்படும் பிரச்னைகள்
பெரும்பாலான நபர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் நெட்வொர்க் கோளாறை சந்திக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் தங்களது அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் பணிகளில் சிரமத்தை எதிர்க்கொள்கின்றனர். தற்போதைய காலக்கட்டத்தில் இணையதளங்கள், செயலிகள் உள்ளிட்டவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். ரயில் டிக்கெட், திரைப்பட டிக்கெட் உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்ய இணையதளம் அல்லது செயலிகளை பயன்படுத்த வேண்டிய நிலையில். இத்தகைய முக்கியமான சூழல்களில் நெட்வொர்க் சிக்கலை சந்தித்தால் அந்த பணியை செய்து முடிக்க முடியாத சூழல் ஏற்படும். எனவே, ஸ்மார்ட்போனில் நெட்வொர் சிக்கலை சரிசெய்ய இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்யுங்கள்
நெட்வொர்க் சிக்கலை சந்திக்கும் போது, ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் (Restart) செய்வதன் மூலம் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வது உங்களுக்கு சாதாரனமாக தோன்றலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்மார்ட்போன் மற்றும் செயலிகளை அப்டேட் செய்யுங்கள்
ஸ்மார்ட்போனின் செயல்திறன் குறைவாக இருக்கும்போது நெட்வொர்க் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் ஸ்மார்ட்போனில் தொடர் நெட்வொர்க் சிக்கல் ஏற்பட்டால் ஸ்மார்ட்போன் மற்றும் செயலிகளை அப்டேட் செய்யுங்கள். காரணம் எப்போதுமே நெட்வொர்க் சிக்கலாக இருக்காது. ஸ்மார்ட்போன் அல்லது செயலிகளின் செயல்திறன் குறைப்பாடாக கூட இருக்கலாம். எனவே ஸ்மார்ட்போன் மற்றும் செயலிகளை அப்டேட் செய்யுங்கள்.