Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெண்களுக்கு ஏன் இன்சூரன்ஸ் அவசியம்? – இதோ 5 முக்கிய காரணங்கள்!

Life Insurance: முன்பு ஆண்களை சுற்றியே குடும்பம் கட்டமைக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு மட்டுமே  காப்பீடுகள் அவசியம் என்ற தவறான பார்வை இருந்து வந்தது.  பெண்களும் குடும்பத்திற்காகவும், குழந்தைகளின் பராமரிப்பிற்காகவும் கணிசமான நேரத்தையும் முயற்சியையும் செலுத்துகிறார்கள். இதன் காரணமாக பெண்களும் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொள்வது அவசியமாகிறது. 

பெண்களுக்கு  ஏன் இன்சூரன்ஸ் அவசியம்? – இதோ 5 முக்கிய காரணங்கள்!
பெண்களுக்கான காப்பீட்டு திட்டங்கள்
karthikeyan-s
Karthikeyan S | Published: 21 Mar 2025 09:48 AM

நமது குடும்ப சூழ்நிலைகள் காலமாற்றத்துக்கு ஏற்ப மாறிவருகின்றன. குறிப்பாக கொரோனா (Corona) காலகட்டம்  ஆண்களுக்கு நிகராக பெண்களும் குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதை உணர்த்தியது. அந்த சூழலை சமாளிக்க பெண்கள் எப்பொழுதும் தயாராக இருப்பது அவசியம். குறிப்பாக ஆண்களைப் போல பெண்களும்  நிதி பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும். முன்பு ஆண்களை சுற்றியே குடும்பம் கட்டமைக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு மட்டுமே  காப்பீடுகள் (Life Insurance) அவசியம் என்ற தவறான பார்வை இருந்து வந்தது.  ஆனால் தற்போது பெண்களும் குடும்பத்திற்காகவும், குழந்தைகளின் பராமரிப்பிற்காகவும் கணிசமான நேரத்தையும் முயற்சியையும் செலுத்துகிறார்கள். இதன் காரணமாக பெண்களும் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொள்வது அவசியமாகிறது.

மேலே சொன்னபடி பெண்களும் தங்கள் குடும்பத்தினருக்காக பாதுகப்பான நிதி ஆதாரத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு டெர்ம் லைப் இன்சூரன்ஸ் என்பது சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. இது குறைந்த விலையில் அதிக தொகைக்கான காப்பீடு வழங்குவதால், எதிர்பாராத நிகழ்வுகளின்போது உங்கள் குடும்பம் எந்த நிதிச் சிக்கலுக்கும் ஆளாகாமல் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.

நிதி சுதந்திரம்:

வாழ்வுக்காப்பீட்டில் இன்று பல்வேறு வகைகள் உள்ளன, சில திட்டங்கள் உங்களுக்கான சேமிப்பு வாய்ப்புகளையும் வழங்குகின்றன. நீண்ட காலத்திற்கான இலக்குகளுக்கு, Unit Linked Insurance Plans போன்ற திட்டங்கள் சந்தை தொடர்புடைய வருமானத்தை வழங்கி, நிதிச் சுதந்திரத்தை அடைய உதவுகின்றன.

 சொந்த கனவுகளை நிறைவேற்ற:

பெண்கள் தங்கள் எதிர்கால இலக்குகளை அடைய சரியான லைப் இன்சூரன்ஸ் திட்டங்களை தேர்வு செய்யலாம். இது ஒரு சொந்த வீடு வாங்குவது, குழந்தைகளுக்கான கல்விக்காக முதலீடு செய்வது போன்றவைகளுக்காக இருக்கலாம். குழந்தை சேமிப்பு திட்டங்கள் (Child Savings Plans) சேமிப்பு மற்றும் பாதுகாப்பு இரண்டையும் ஒரே நேரத்தில் வழங்கி உங்களது கனவுகளை நனவாக்க உதவும்.

ஓய்வூதிய திட்டமிடல்:

குடும்ப அமைப்புகள் மாறிவரும் சூழலில், ஓய்வூதிய காலத்திற்கான திட்டமிடல் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்று தான். புதிய ULIP ஓய்வூதிய திட்டங்கள் (ULIP Pension Plans) முற்றிலும் வரிவிலக்கு பெறக்கூடிய முறையில் 60% வரை தொகையை திரும்ப பெற அனுமதிக்கின்றன. மேலும், ஓய்வூதியத்திற்குப் பிறகு சீரான வருமானத்தை பெற வழிவகை செய்கின்றன.

மருத்துவ தேவைகள்

லைப் இன்சூரன்ஸ் மட்டுமல்லாமல்,  ஆபத்தான நோய்களுக்காக Critical Illness Benefit Rider எனும்  திட்டம் உடல் நலக்குறைவு ஏற்பட்டால்  நிதி ஆதாரமாக விளங்கும். இந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில தீவிர நோய்களினால் பாதிக்கப்பட்டால் முன்கூட்டியே ஒரு தொகை வழங்கப்படும்.

பெண்கள் சுதந்திரமாக இயங்க இன்சூரன்ஸ் பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாக எதிர்கால தேவைகளுக்கு யாரையும் எதிர்பார்த்து நிற்க வேண்டிய சூழல் நிற்காது. இதன் காரணமாக எதிர்காலம் குறித்து கவலைப்படாமல் திட்ட முடியும். இதன் காரணமாக அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவர்களின் குடும்பத்தின் முக்கிய முடிவுகளை அவர்களால் எடுக்க முடியும்.  குழந்தைகள் தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும். இந்திய சூழலை பொறுத்தவரை பெண்கள் திருமணத்துக்கு பிறகும் தங்களது பெற்றோர்களை பார்த்துக்கொள்ளவும் இது உதவும். மேல குறிப்பிடப்பட்ட சில விஷயங்களைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு தேவையான இன்சூரன்ஸ் தேர்ந்தெடுப்பது அவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும்.

 

வீராணம் ஏரியில் நுரை பொங்கி வரும் நீர்! விவசாயிகள், மக்கள் அச்சம்
வீராணம் ஏரியில் நுரை பொங்கி வரும் நீர்! விவசாயிகள், மக்கள் அச்சம்...
எல்லையில் பரபரப்பு.. சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்!
எல்லையில் பரபரப்பு.. சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்!...
ஊட்டிக்கு டூர் போறீங்களா? இன்னொரு ஸ்பெஷல் காத்திருக்கு...
ஊட்டிக்கு டூர் போறீங்களா? இன்னொரு ஸ்பெஷல் காத்திருக்கு......
துன்பங்களை போக்கும் வாசவி ஜெயந்தி எப்போது? - வழிபாடு முறைகள் இதோ!
துன்பங்களை போக்கும் வாசவி ஜெயந்தி எப்போது? - வழிபாடு முறைகள் இதோ!...
ஆம்னி வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து... 4 பேர் பலி
ஆம்னி வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து... 4 பேர் பலி...
அமைச்சர்கள் சென்னையில் இருக்கக்கூடாது முதலமைச்சர் ஸ்டாலின் கறார்
அமைச்சர்கள் சென்னையில் இருக்கக்கூடாது முதலமைச்சர் ஸ்டாலின் கறார்...
ஆன்லைன் ரம்மியால் வெடித்த மோதல்... கார் ஏற்றி ஒருவர் கொலை
ஆன்லைன் ரம்மியால் வெடித்த மோதல்... கார் ஏற்றி ஒருவர் கொலை...
மனைவியை கொன்று நாடமாடிய ஜிம் மாஸ்டர்.. சிக்கியது எப்படி?
மனைவியை கொன்று நாடமாடிய ஜிம் மாஸ்டர்.. சிக்கியது எப்படி?...
தமிழ் சினிமாவின் பேரழகி.. நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று!
தமிழ் சினிமாவின் பேரழகி.. நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று!...
கௌரவ வெற்றிக்காக ராஜஸ்தான்! கட்டாய வெற்றிக்காக கொல்கத்தா!
கௌரவ வெற்றிக்காக ராஜஸ்தான்! கட்டாய வெற்றிக்காக கொல்கத்தா!...
மீன்பிடித் தடைகாலம்: மீன் வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு
மீன்பிடித் தடைகாலம்: மீன் வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு...