Pahalgam Terror Attack: மத்திய அரசு அதிரடி! தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் தலைவராக அலோக் ஜோஷி நியமனம்!

National Security Advisory Board New Chairman: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் RAW தலைவர் அலோக் ஜோஷி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற மூன்று படை அதிகாரிகள் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த மாற்றங்கள் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pahalgam Terror Attack: மத்திய அரசு அதிரடி! தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் தலைவராக அலோக் ஜோஷி நியமனம்!

முன்னாள் ரா தலைவர் அலோக் ஜோஷி

Published: 

30 Apr 2025 16:24 PM

டெல்லி, ஏப்ரல் 30: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு (Pahalgam Terror Attack) பிறகு இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த எதிர்பாராத தாக்குதலுக்கு பிறகு மத்திய அரசு, தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தில் பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி, முன்னாள் ரா தலைவர் அலோக் ஜோஷி (Alok Joshi) தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் (National Security Advisory Board) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அலோக் ஜோஷியுடன் சேர்ந்து அந்த வாரியத்தில் மொத்தம் 7 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், இந்த வாரியத்தில் முப்படைகளில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா விரைவில் தக்க பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாரியத்தில் இடம்பெற்றுள்ள மற்ற உறுப்பினர்கள் யார் யார்..?

முன்னாள் மேற்கு விமானப்படை தளபதி ஏன் மார்ஷல் பி.எம்.சின்ஹா, முன்னாள் தெற்கு ராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஏ.கே.சிங் மற்றும் ரியர் அட்மிரல் மோண்டி கன்னா ஆகியோர் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தில் இடம் பெற்றுள்ளனர். மேலும், இந்த வாரியத்தில் ராஜீவ் ரஞ்சன் வர்மா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஓய்வுபெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரியான பி.வெங்கடேஷ் வர்மாவும் 7 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் என்றால் என்ன..?

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் என்பது ஒரு சிறப்பு வகை குழுவாகும். இதில், தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு நீண்டகால பகுப்பாய்வை வழங்குவதே இதன் முக்கிய வேலையாகும். மேலும், கவுன்சில் எழுப்பும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் மற்றும் முக்கிய ஆலோசனைகளை வழங்கும்.

யார் இந்த அலோக் ஜோஷி..?

ஹரியானாவில் பல மாவட்டங்களில் எஸ்.பியாக பணியாற்றிய பிறகு அலோக் ஜோஷி, டெப்யூடேஷன் மூலம் (RAW) ரா வந்தார். அலோக் ஜோஷி நீண்ட காலமாக வெளிநாட்டிலும் வசித்து வந்தார். மேலும், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் தொடர்பான சிறப்பான பணிகளை மேற்கொண்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து திரும்பிய பிறகு, அலோக் ஜோஷி சிறிது காலம் ஹரியானாவில் ஐஜியாக பணியாற்றினார். இதன்பிறகு, கடந்த 2012ம் ஆண்டு மத்திய பணிக்காக அலோக் ஜோஷி ராவுக்கு மாற்றப்பட்டார். RAW-வில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, 2014-ல் அவருக்கு ‘தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின்’ (NTRO) தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவர் இந்தப் பதவியில் 2018 வரை பணியாற்றினார்.