Pahalgam Terror Attack: பாதுகாப்பு எனது பொறுப்பு.. பிரதமர் மோடி அதை செய்வார்! பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

India's Defense Minister Rajnath Singh: பஹல்காம் தாக்குதலைக் கண்டித்த ராஜ்நாத் சிங், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்தும், 2047-ல் வளர்ந்த நாடாக மாறுவதற்கான பிரதமர் மோடியின் இலக்கை அடைவதற்கு சர்வதேச அங்கீகாரம் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டினார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, விசாரணையில் உள்ளூர்வாசிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

Pahalgam Terror Attack: பாதுகாப்பு எனது பொறுப்பு.. பிரதமர் மோடி அதை செய்வார்! பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Published: 

04 May 2025 21:09 PM

டெல்லி, மே 4: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு (Pahalgam Terror Attack) பிறகு, இந்தியா முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கோபமான குரல்கள் ஒலித்து வருகிறது. இந்தநிலையில், டெல்லியில் உள்ள பக்கர்வாலா ஆனந்த் தாம் ஆசிரமத்தில் நடைபெற்ற சனாதன் சமஸ்கிருதி ஜாக்ரன் மஹோத்சவ் நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath singh) கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பஹல்காம் தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையும், எனது ராணுவ வீரர்களுடன் சேர்ந்து இந்திய எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது எனது பொறுப்பு என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்துபவர்களுக்கு தகுந்த பதில் அளிக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

எச்சரிக்கை விடுத்த ராஜ்நாத் சிங்:

அந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “ பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய மக்கள் விரும்பும் அதே மொழியில் பிரதமர் நரேந்திர மோடி எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பார். நீங்கள் விரும்புவது பிரதமர் மோடியின் தலைமையில் நடக்கும். உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அழிக்க முடியாது. இந்தியா அழியாமல் தொடர்ந்து நிலைத்திருக்கும். ஒரு பாதுகாப்பு அமைச்சராக, எனது ராணுவ வீரர்களுடன் சேர்ந்து இந்தியாவில் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது எனது பொறுப்பு.

இந்தியாவின் மீது கண்களை தாக்குதல் உயர்த்துபவர்களுக்கு எனது ராணுவத்துடன் சேர்ந்து தகுந்த பதிலடி கொடுப்பது எனது கடமை. இந்தியாவின் பலம் அதன் இராணுவ பலத்தில் மட்டுமல்ல, அதன் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திலும் உள்ளது. இந்தியாவின் துறவிகள் ஆன்மீக போதனைகளை வழங்கியது மட்டுமல்லாமல், சமூக சீர்திருத்தம், கல்வி மற்றும் தேசிய ஒற்றுமையிலும் முன்னணிப் பங்காற்றினர் என்பதற்கு வரலாறு சாட்சி” என்று தெரிவித்தார்.

இந்தியா விரைவில் வளர்ந்த நாடாக மாறும்:

தொடர்ந்து பேசிய அவர், “வருகின்ற 2047ம் ஆண்டுக்குள் இந்தியா நாடு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை பிரதமர் மோடி முன் வைத்துள்ளாட். இயற்கையாகவே, இந்த இலக்கு ஒரு சிறிய இலக்கு அல்ல, ஆனால், நீங்கள் அனைவரும் நினைத்தால் இது நடக்கும். சர்வதேச அளவில் இந்தியாவின் கௌரவம் அதிகரித்துள்ளது என்ற உண்மையை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்போது இலக்கு அடையப்படும். சர்வதேச அளவில் இந்தியாவின் அந்தஸ்து அதிகரித்துள்ளது.” என்று தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதல் விசாரணை:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையிம்போது அனந்த்நாக்கில் 25க்கும் மேற்பட்ட உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதாவது உள்ளூர் மக்களின் உதவியின்றி இந்த தாக்குதல் நடந்திருக்காது என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவிக்கிறது. இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கக்கூடிய நபர்களை பாதுகாப்பு ஏஜென்சிகள் தீவிரமாக தேடி வருகின்றன.