அடுத்த போப் ஆண்டவராகும் டிரம்ப்? அவரே சொன்ன முக்கியம் விஷயம்.. வைரலாகும் வீடியோ!
Donald Trump On Pope : நான் போப்பாக இருக்க விரும்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் இதுபோன்ற பதிலளித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிரம்ப்
போப் ஆக விரும்புவது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நகைச்சுவையாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், ” நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்” என்று நகைச்சுவையாக பேசி உள்ளார். கத்தோலிக்க கிறிஸ்துவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் 2025 ஏப்ரல் 21ஆம் தேதி காலை மறைந்தார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
அடுத்த போப் ஆண்டவராகும் டிரம்ப்?
மறைந்த போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குகள் வாடிகன் நகரில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு உலக தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 2025 ஏப்ரல் 27ஆம் தேதி அவரது உடல் புனித மரியா பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
போப் பிரான்சிஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் உள்ளிட்டோர் வாடிகனுக்கு சென்றனர். அப்போது, செய்தியாளர்கள் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த டிரம்ப், நான் போப்பாக இருக்க விரும்புகிறேன். அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்” என்று நகைச்சுவையாக கூறினார். பின்னர் அவர் போப் பிரான்சிஸின் வாரிசுகள் குறித்து பேசிய டிரம்ப், ” தனக்கு குறிப்பாகப் பிடித்தவர் யாரும் இல்லை. நியூயார்க்கின் பேராயர் கார்டினல் டிமோதி டோலனை அந்த பதவிக்கு மிகவும் நல்லவர். எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறினார்.
வைரலாகும் வீடியோ
I was excited to hear that President Trump is open to the idea of being the next Pope. This would truly be a dark horse candidate, but I would ask the papal conclave and Catholic faithful to keep an open mind about this possibility!
The first Pope-U.S. President combination has… pic.twitter.com/MM9vE5Uvzb
— Lindsey Graham (@LindseyGrahamSC) April 29, 2025
டிரப்பின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “அடுத்த போப் ஆகும் யோசனைக்கு அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்து இருப்பதை கேள்விப்பட்டு நான் உற்சாகம் அடைந்தேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். மூன்று முறை திருமணம் செய்து கொண்ட டிரம்ப், கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்படப் போவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது குறிப்பிடத்தக்கது.