Credit: Instagram
16 october 2026
Credit: Instagram
பான் இந்திய மக்கள் மத்தியில் மிக பெரிய பெருமையையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் ராக்ஸ்டார் யாஷ்.
ஆரம்பத்தில் கன்னட சினிமாவில் நடிகராக படங்களில் நடித்துவந்த நிலையில், தற்போது பான் இந்தியாவே அறியும் நாயகனாக இருக்கிறார்.
கன்னடத்தில் ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து, பின் சினிமாவில் நாயகனாக நடித்து பல ஹிட் படங்களை இவர் கொடுத்திருக்கிறார்.
மேலும் இவருக்கு பான் இந்தியா அளவுக்கு முதல் முதலில் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் கேஜிஃஎப் சாப்டர் 1 (2018).
இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் மூலம் இவருக்கு பான் இந்திய அளவு பிரபல கிடைத்திருந்தது.
இந்த படத்திற்கு பின் கேஜிஃஎப் 2 என்ற படத்திலும் நடித்திருந்தார். பின் தனது நடிப்பு மற்றும் எழுத்தில் உருவான படம்தான் டாக்ஸிக்.
பெண் இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கிய இப்படம், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் வெளியாகி கலவையான விமர்சங்களை பெற்றது.
இந்த படத்திற்கு பின் இவர் மிக பிரம்மாண்டமாக நடித்த திரைப்படம்தான் ராமாயணா. இதில் இவர் ராவணனாக நடித்துள்ளார்.
சமீபத்தில் கன்னடத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்த நிலையில், ராமாயணா படத்தின் மீது ரசிகர்கள் இடும் சண்டை குறித்து பேசியுள்ளார்.
யாஷ், தேவையற்ற ரசிகர் சண்டையில் ஈடுபடும் நண்பர்களே, ராமாயணம் நமது பெருமை. சண்டைகளை விட்டுவிட்டு பெருமையாக மேம்படுத்துவோம் என கூறியுள்ளார்.