24 August 2026
Credit: Instagram
பான் இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் ராக்கிங் ஸ்டார் யாஷ். இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் படங்கள் உருவாகிறது.
ஆரம்பகாலத்தில் சின்னத்திரை நடிகராக நடிக்க தொடங்கிய இவர், தற்போது சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார்.
தனது சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட யாஷ், நாடகங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
இவர் கடந்த 2016ம் ஆண்டில் தன்னுடன் நடித்த ராதிகா பண்டித் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் நந்தா கோகுலா என்ற படத்தில் இணைந்து நடித்தவர்கள்.
நடிகர் யாஷ் மற்றும் ராதிகா பண்டித் என்ற ஜோடிக்கு இரு குழந்தைகளும் உள்ளது. இவர்களின் திருமண வாழ்க்கை 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
நடிகர் யாஷ் கன்னட சினிமாவில் சிறந்த நடிகராக இருந்த இவர், தற்போது பான் இந்திய சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.
பான் இந்திய மொழிகளில் இவருக்கு மிகவும் பிரபலத்தை கொடுத்த திரைப்படம் கேஜிஃஎப் 1 மற்றும் 2. இந்த படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை பெற்றுத்தந்தது.
இந்த படத்திற்கு பின் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் உருவாகிவந்த திரைப்படம்தான் டாக்ஸிக். இதில் ரெட்டை வேடத்தில் நடித்துள்ள நிலையில், எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த யாஷ், தனக்கு தெலுங்கு சினிமாவில் பிடித்த திரைப்படங்களின் லிஸ்டை தெரிவித்துள்ளார்.
யாஷுக்கு தெலுங்கில் பாகுபலி, போக்கிரி, ஓஜி, மகதீரா, புஷ்பா, கிக் போன்ற தெலுங்கு படங்கள் எனக்கு பிடிக்கும். நான் எல்லா தெலுங்கு நடிகர்களின் படங்களையும் பார்ப்பேன் என்றும் கூறினார்.