06 Mar 2026
Credit: X
விளையாட்டு உலகில் இந்திய மகளிர் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகின்றனர். இந்தநிலையில், 2025-26 ஆண்டில் இந்திய மகளிர் படைத்த சாதனைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
2025ம் ஆண்டில் இந்திய மகளிர் அணி தனது முதல் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, 2025 காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார்.
2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதலில் டீன் ஏஜ் பிரிவில் தங்க வென்றார்.
2025ம் ஆண்டில் தீபிகா குமாரி மற்றும் அங்கிதா பகத் போன்றோர் வில்வித்தையில் அசத்தி உலக நாடுகளை திரும்பி பார்க்க செய்தனர்.
திவ்யா தேஷ்முக் போன்ற இளம் தலைமுறையினர் சதுரங்கத்தில் கடந்த 2025ம் ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பார்வையற்ற பெண்கள் 2025 டி20 உலகக் கோப்பையில் நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்தது.
இந்திய அணி 2025ம் ஆண்டு மகளிர் கபடி உலகக் கோப்பையை வென்று தொடர்ச்சியாக 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தூக்கியது.
தெலுங்கானாவின் தேஜம் நிகாத் ஜரீன் 51 கிலோ பிரிவில் உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி கைகள் இல்லாத போதிலும், தனது கால்களால் அம்பை எய்து உலக பாரா சாம்பியனானார்.