23 Dec 2025
Credit: Freepik
பெண்களுக்கு தங்களது சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால், சரும பிரச்னைகள் அவர்களின் சருமத்தை பொலிவற்றதாக மாற்றிவிடும்.
சரும பிரச்னைகள் உள்ள பெண்கள் இந்த சில விஷயங்களை செய்யும்போது அவர்களது சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.
பெண்கள் ஒரு ஐந்து சரும பராமரிப்பு முறைகளை கையாளுவதன் மூலம் முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளலாம்.
கிளன்சர் செய்வது முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் எண்ணெய் பிசுக்குகளை சுத்தம் செய்து முகத்தை ஜொலிக்க செய்யும்.
எக்ஸ்ஃபோலியேட் செய்வது சருமத்தின் மேல் இருக்கும் இறந்த செல்களை சுத்தம் செய்து முகத்தை பொலிவாக்கும்.
ஹைடரேஷன் செய்வதன் மூலம் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படும்.
பேஸ் சீரம் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். சரமத்தில் எளிதாக ஊடுருவி சிறந்த பலன்களை வழங்கும்.
சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது சருமத்தை சூரிய ஒளியில் இருந்தும் புற உதா கதிரிலிருந்தும் பாதுகாக்கும்.
இந்த நடைமுறைகளை தொடர்ச்சியாக செய்யும் பட்சத்தில் சருமம் மிகவும் பாதுகாப்பாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.