07 SEP 2026
Credit: GETTY
தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் தங்க நகைக் கடன் வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம் தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களையே பொதுமக்கள் அதிகம் தேர்வு செய்து வந்த நிலையில், தற்போது தங்க நகைக் கடனின் அளவு உயர்ந்துள்ளது.
தங்க நகைக் கடன் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுவதன் காரணமாக, பலரும் அதனை தேர்வு செய்கின்றனர்.
தங்க நகைக் கடனில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், அதில் சில சிக்கல்களும் உள்ளன. அதாவது, அடகு வைத்த நகைகள் காணாமல் போவது.
திருட்டு சம்பவங்கள் அல்லது ஏதேனும் விபத்துகள் காரணமாக, அடகு வைத்த நகைகள் சேதமாகினால் சிக்கல் தான்.
இந்த நிலையில், வங்கியில் அடகு வைத்த தங்க நகைகள் திருடப்பட்டால் அந்த உரிய வங்கி அதற்கு இழப்பீடு வழங்குமா?.
அதற்காக தங்க நகைகள் திருடப்பட்டால், உரிய நபருக்கு அதிக இழப்பீடு வழங்கப்படும் என்று அர்த்தம் இல்லை.
எப்படி திருட்டு நடந்தது, வங்கியின் ஒப்பந்த விதிகள் என்ன, காப்பீடு எவ்வளவு என்பவற்றை பொறுத்தே ஒருவருக்கான தங்க நகைக்கான இழப்பீடு வழங்கப்படும்.
எனவே, நீங்கள் வங்கியில் உங்களது தங்க நகைகளை அடகு வைக்க போகிறீர்கள் என்றால், அந்த வங்கியின் காப்பீடு விதிகள் உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
தங்க நகைக் கடனில் வட்டி குறைவு, நல்ல லானம் என சிறப்பு அம்சங்கள் இருந்தாலும் நகைகளுக்கான பாதுகாப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.