30 AUG 2026

மேகங்களைத் தொடலாமா? ஏலகிரி வழங்கும் புதுமையான அனுபவம்!

Credit: getty

தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் கிழக்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக ஏலகிரி அமைந்துள்ளது.

அமைவிடம்

குறைந்த செலவில் சுற்றுலா செல்ல உகந்த இடம் என்பதால் இதைக் 'ஏழைகளின் ஊட்டி' என்றும் அழைப்பார்கள்.

அடைமொழி

ஏலகிரி மலையில் மொத்தம் 14 ஆபத்தான மற்றும் அழகிய கொண்டை ஊசி வளைவுகள் அமைந்துள்ளன.

வளைவுகள்

சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கொள்ளைகொள்ளும் வகையில் புங்கனூர் ஏரி மிக அழகாக அமைந்துள்ளது.

புங்கனூர்

ஏரிக்கு அருகிலேயே குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்காகச் சிறுவர் பூங்காக்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பூங்காக்கள்

இங்கு வனத்துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் அரிய வகை மூலிகைப் பண்ணை அமைந்திருக்கிறது.

பண்ணைகள்

மங்கலம் சுவாமிமலைப் பகுதி மலை ஏற்றம் செய்பவர்களுக்கு ஒரு சிறந்த சொர்க்கமாகத் திகழ்கிறது.

சுவாமிமலை

நிலாவூரில் அமைந்துள்ள வியூ பாயிண்ட் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் அம்சமாகும்.

நிலாவூர்

நிலாவூர் கோபுரப் பகுதியில் நின்று பார்க்கும்போது சூரியன் உதிப்பதையும் மறைவதையும் தெளிவாகக் காணலாம்.

சூரியோதயம்

ஏலகிரி மலைப்பகுதியில் மொத்தம் 14 அழகான இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்கள் அமைந்துள்ளன.

கிராமங்கள்