18 AUG 2025
Credit: Freepik
அதீத வெயில் காரணமாக பலரும் இரவில் குளித்துவிட்டு, தூங்க செல்கிறார்கள்.
இரவு உணவு உண்ட உடனேயே குளிப்பது உங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
உணவு உண்ட உடனேயே குளிக்கும் தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.
உணவு உண்ட பிறகு, நம் உடல் செரிமான செயல்பாட்டில் மும்முரமாக ஈடுபடும்.
சாப்பிட்ட உடனேயே குளிப்பது நமது உடலை கூடுதலாக உழைக்க வைக்கிறது.
சாப்பிட்ட பிறகு குளித்த பின்னர் பலருக்கு தலைசுற்றல், சோர்வு மற்றும் மந்தநிலை ஏற்படுவதாக கூறுகிறார்கள்.
உணவுக்கு பிறகு குளிப்பது உடலில் இரத்த ஓட்டத்தின் பரவலை மாற்றும்.
இது செரிமான செயல்முறையை மெதுவாக்கலாம். அப்படி இல்லையெனில், செரிமான கோளாறு ஏற்படலாம்.
உணவு உண்ட பிறகு ஒன்று அல்லது 2 மணி நேரம் கழித்து குளிப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.
ஏனெனில், இவ்வாறு செய்வது உணவு செரிமானம் ஆவதற்கு போதுமான நேரத்தை கொடுக்கும்.