03 Nov 2026
Credit: Pexels
பரபரப்பான வாழ்க்கை, சூரிய ஒளியில் இருந்து விலகி இருப்பது மற்றும் சமநிலையற்ற உணவுமுறை வைட்டமின் டி குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
வைட்டமின் டியானது கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. இதன் குறைபாடு எலும்புகளை பலவீனப்படுத்தி பிரச்சனையை கொடுக்கும்.
வைட்டமின் டி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது சளி, காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.
தொடர்ச்சியான சோர்வு, குறைந்த ஆற்றல் மற்றும் தசை பலவீனம் ஆகியவையும் வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளாகும்.
வைட்டமின் டி குறைபாடு மனச்சோர்வு, எரிச்சல், மன அழுத்தம் மற்றும் மனநிலை கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
வைட்டமின் டி மயிர்க்கால்கலை வலுப்படுத்துகிறது. இதன் குறைபாடு முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. மேலும், முடி மெலிந்து உடைகிறது.
வைட்டமின் டி குறைபாடு கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரைக்கு வழிவகுத்து, வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
வைட்டமின் டி குறைபாடு இரத்த அழுத்தம் மற்றும் இதய செயல்பாட்டை பாதிக்கிறது.
இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
முடிந்தவரை காலை சூரியன் உதிக்கும்போது ஒளியில் தென்படுங்கள். இது வைட்டமின் டி குறைபாடு பிரச்சனையை சரிசெய்யும்.