18 Mar 2025
Credit: Freepik
எல்பிஜியை திரவ நிலையில் ஏன் உள்ளது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கான விடையை தெரிந்து கொள்வோம்.
எல்பிஜி திரவ நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம், அதன் கன அளவை குறைப்பதே ஆகும்.
திரவங்கள் வாயுக்களை விட மிக குறைவான இடத்தையே எடுத்துக்கொள்கின்றன.
இதை சேமித்து வைப்பதும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்து செல்வது எளிதாகும்.
எல்பிஜி வாயுவிலிருந்து திரவமாக மாறும்போது, அதன் கன அளவு சுமார் 270 மடங்கு குறைகிறது.
டேங்கர்களில் ஆயிரக்கணக்கான டன் எரிவாயுவை கொண்டு செல்வதற்கு திரவ வடிவமே சிறந்தது.
இது ஒரு யூனிட்டிற்கான போக்குவரத்து செலவையும் குறைக்கிறது.
திரவ வடிவில் இருப்பதால் எல்பிஜியை தொலைதூர கிராமங்களுக்கும், மலைப்பகுதிகளுக்கும் கொண்டு செல்வது எளிது.
எத்தில் மெர்காப்டான் எனப்படும் கடுமையான வாசனையுடைய வேதிப்பொருள் திரவத்தில் சேர்க்கப்படுகிறது.
இது எரிவாயு கசிவை உடனடியாக கண்டறிந்து விபத்துகளை தடுக்கிறது.