04 OCT 2026

வயிறு பசிச்சா கோபம் வருதா? 'ஹேங்ரி' ரகசியமும் எளிய தீர்வும்!

Credit:Unsplash

பசியினால் ஏற்படும் கோபமும் எரிச்சலும் ஆங்கிலத்தில் 'ஹேங்ரி' (Hangry) என்று அழைக்கப்படுகிறது.

வரையறை

பசி எடுக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து, மூளைக்கான ஆற்றல் தடைபடுகிறது.

சர்க்கரை

ஆற்றலை மீட்டெடுக்க உடலால் கார்டிசால் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் சுரக்கின்றன.

ஹார்மோன்கள்

ஹார்மோன்களின் திடீர் சுரப்பால் நமக்கு அறியாமலேயே பதற்றமும், அசௌகரியமும், கோபமும் உருவாகிறது.

காரணம்

பசியில் இருக்கும்போது மனநிலை எதிர்மறையாக மாறி, சிறிய விஷயங்கள் கூட அதிக எரிச்சலைத் தரும்.

சூழல்

வயிற்றில் உள்ள பசியின் வெளிப்பாட்டை எதிரில் உள்ள மனிதர்கள் மீது காட்டுவது 'ஹேங்ரி பயாஸ்' எனப்படும்.

பயாஸ்

புரதச்சத்து நிறைந்த உணவுகள் மெதுவாக செரிமானமாகி, ரத்த சர்க்கரை அளவைச் சீராக வைக்கும்.

உணவு

வயிறு கடுமையாகப் பசிக்கும் வரை காத்திராமல், லேசான பசி தோன்றும்போதே சாப்பிட்டுவிட வேண்டும்.

அறிகுறி

வேலைப்பளு காரணமாக உணவைத் தள்ளிப்போடாமல், சரியான நேரத்திற்குச் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.

நேரம்

 உடனடியாகச் சாப்பிட முடியாத சூழலில், மெல்லிய இசையைக் கேட்டு மனதை அமைதிப்படுத்தலாம்.

இசை