31 AUG 2026
Credit: pexels
தூக்கத்திற்கும் விழிப்பு நிலைக்கும் இடையில் நிகழும் ஏற்படும் திடீர் அதிர்வு, ஹிப்னிக் ஜெர்க் என்று அழைக்கப்படுகிறது.
நீங்கள் அதீத சோர்வின்போது தூங்கும்போது இந்த திடீர் அதிர்வு ஏற்படலாம்.
அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாகவும் இது ஏற்படலாம்.
தூக்கமின்மையின் காரணமாகவும் நீங்கள் இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்.
தூக்கத்தின்போது தசைகள் திடீரென சுருங்குவதே அதிர்வு எனப்படுகிறது.
உங்களுக்கு தொடர்ந்து தூக்கத்தின்போது, இப்படியான அதிர்வுகள் ஏற்பட்டால், நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
தூங்குவதற்கு முன் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்கவும்.
மன அழுத்தத்தை மறந்து, சீக்கிரம் தூங்க முயற்சி செய்யுங்கள்.
தூங்குவதற்கு சில நிமிடங்கள் தியான பயிற்சி அல்லது யோகா செய்யுங்கள்.
இது உடலுக்கு தேவையான ஆறுதலை கொடுத்து, முழுமையான தூக்கத்தை கொடுக்கும்.