19 Jan 2025
Credit: Freepik
குளிர்காலம் பலருக்கும் பிடித்த ஒரு பருவகாலமாகும்.
பெரும்பாலும் குளிர்காலம் அதிகரிக்க தொடங்கியதும் பல பிரச்சனைகள் வர தொடங்கும்.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் அதிகளவில் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
அந்தவகையில், குளிர்காலத்தில் சர்க்கரை அளவு ஏன் அதிகரிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
குளிர்காலத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
குளிரில் உடல் செயல்பாடு குறைகிறது. இது குளுக்கோஸ் சர்யான பயன்பாட்டை பெற தடுக்கிறது.
குளிர்காலம் தொடங்கியவுடன் உணவில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
குறைந்த வெப்பநிலையில் உடலில் பல ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. இது சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
சர்க்கரை அதிகரிப்பதற்கு தண்ணீர் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறையும் ஒரு காரணமாகும்.
எனவே, குளிர்காலத்தில் சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது மிக முக்கியம்.