23 Oct 2026
Credit: Pexels
பருவமழை காலத்தில் அதிகரிக்கும் ஈரப்பதம், அதிகப்படியான வியர்வையை உண்டாக்கி, சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தலாம்.
வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழல்கள் பூஞ்சை தொற்றுகளின் அபாயத்தை அதிகரித்து, அரிப்பு மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மழையில் ஈரமான ஆடைகளை நீண்ட நேரம் அணிவது தோல் எரிச்சலையும், அரிப்பையும் அதிகரிக்கும்.
சோப்பு மற்றும் பிற பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதால் சருமம் வறண்டு, அரிப்பு ஏற்படலாம்.
சிலருக்கு ஈரப்பதம், தூசி அல்லது பூஞ்சை காரணமாக சரும அலற்ஜி ஏற்பட்டு, அரிப்பை உண்டாக்கலாம்.
தொடைகளுக்கும் கால்களுக்கும் இடையில் உள்ள ஈரப்பதம், அரிப்பு பிரச்சனையை அதிகரிக்கக்கூடும்.
மழையில் நனைந்தால் உடனடியாக தலையை துவட்டாமல், ஒரு முறை குளித்து நன்றாக துவட்டுங்கள்.
மழையில் நனைந்த பிறகு உங்கள் உடலையும், ஆடைகளையும் நன்றாக உலர்த்துங்கள்.
அரிப்புள்ள இடத்தை மீண்டும் மீண்டும் சொறியாதீர்கள். அவ்வாறு செய்தால் தோலில் புண்கள் ஏற்படக்கூடும்.
அரிப்பு தொடந்தாலோ அல்லது தடிப்புகள், புண்கள், சிரங்குகள் தோன்றினாலோ மருத்துவரை அணுகவும்.