05 Jan 2025
Credit: Freepik
குளிர்காலத்தில் நீங்கள் சோம்பேறியாக உணரலாம்.
காலையில் எழுந்ததும் உங்கள் உடல் வலிக்க தொடங்கும்.
குளிர்காலத்தில் மட்டும் ஏன் இந்த வலி ஏற்படுகிறது என்று தெரியுமா?
குளிர்காலத்தில் உடலில் நரம்புகள் சுருங்க தொடங்கும். மேலும், இரத்தமும் ஆக்ஸிஜனும் உடல் பாகங்களை சரியாக சென்றடையாது.
இது மூட்டுகளில் நெகிழ்வுத்தன்மையை குறைத்து, உடலின் தசைகளில் விறைப்பு மற்றும் வலியை ஏற்படுத்தும்.
குளிர்காலத்தில் மூட்டுகளில் இருக்கும் திரவம் கெட்டியாகும். இது மூட்டுகளில் விறைப்பை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும்.
குளிரில் காற்றழுத்தம் குறைவதால் மூட்டுகளை சுற்றியுள்ள தசைகள் வீங்கி, நரம்புகள் மீது அழுத்தம் கொடுத்து வலி ஏற்படும்.
குளிர்காலத்தில் குறைவான இயக்கம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை காரணமாக உடல் வலியை அதிகரிக்கும்.
காலை வேளையில் லேசான சூரிய ஒளியை பெறுவது, முட்டை, காளான்கள், கீரை ஆகியவற்றை உட்கொள்வது இதை தவிர்க்கலாம்.
குளிர்காலத்தில் முடிந்தவரை குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்க்கவும். வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.