19 AUG 2025
Credit: Freepik
போதுமான அளவு தூங்காவிட்டால், கண்களுக்கு கீழே கருவளையங்கள் தோன்றும்.
தொடர்ச்சியான சோர்வும், மன அழுத்தமும் கூட கண்களுக்கு கீழ் கருவளையங்களை வர செய்யும்.
கண்களை திரும்ப திரும்ப தேய்ப்பது, கண்களை சுற்றியுள்ள சருமத்தை பாதிக்கும்.
உடலில் நீர்ச்சத்து குறையும்போது, கண்களுக்கு கீழுள்ள பகுதி கருமையாக தோன்றும்.
ஒவ்வாமை அல்லது கண் எரிச்சல் காரணமாகவும் கருவளையங்கள் ஏற்படலாம்.
நீண்ட நேரம் திரையை உற்று பார்ப்பது கண் சோர்வை ஏற்படுத்தி, கருவளையங்களை உண்டாக்கும்.
சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பது சரும நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.
சிலருக்கு மரபியல் காரணங்களாலும் கருவளையங்கள் உண்டாகலாம்.
வயதாகும்போது கண்களுக்கு கீழுள்ள தோல் மெலிந்து கருவளையம் மேலும் தெளிவாக தெரியும்.
கருவளையங்கள் நீண்ட நாட்கள் நீடித்தால், தோல் மருத்துவரை பார்ப்பது சிறந்தது.