26 AUG 2026

அதிக புரதச்சத்து உணவுகள் ஏன் ஆபத்தானது..?

Credit: Freepik

உங்களுக்கு தேவையானதை விட அதிக புரதம் எடுத்து கொள்வது, உடல் அந்த அளவை சமாளிக்க வேண்டியிருக்கும்.

தேவை

அதிகப்படியான புரதத்தை உட்கொள்வது வயிற்று உப்புசம், மலச்சிக்கல் அல்லது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மலச்சிக்கல்

அதிகப்படியான புரதத்தை உட்கொள்வதும், மிக குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதும் நீரிழப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

நீரிழப்பு

உணவில் உள்ள புரதத்தின் பெரும்பகுதி ரெட் அல்லது பதப்படுத்தப்பட்ட மீட்டாக இருந்தால், அது ஆரோக்கியமானது கிடையாது.

ஆரோக்கியம்

தேவைக்கு அதிகமான புரதச்சத்து கொண்ட உணவுகளை உட்கொண்டாலும், உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

உடல் எடை

சிறுநீரக நோய் உள்ளவர்கள் அதிகப்படியான புரதத்தை உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

சிறுநீரக நோய்

ஜிம் செல்பவர்களை புரதத்தில் மட்டுமே கவனம் செலுத்தி, அதற்கு தேவையான உணவுகளை எடுத்து கொள்கிறார்கள்.

கவனம்

இதனால் பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.

காய்கறிகள்

புரத தேவைகள் வயது, உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்து மாறுபடும்.

உடல் செயல்பாடு

எனவே, புரதம் முக்கியமானதுதான். ஆனால், அதனுடன் சமச்சீரான அளவிலும் பிற ஊட்டச்சத்து உணவுகளை  எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஊட்டச்சத்து