11 Jun 2025
Credit: Freepik
தானத்தில் சிறந்த தானங்களில் இரத்த தானமும் ஒன்று.
இரத்த தானம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. தினமும் பலருக்கும் இரத்தம் தேவைப்படுகிறது.
இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயதுக்கு குறைவாக இருக்கக்கூடாது.
அதேபோல், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் இரத்த தானம் செய்யக்கூடாது.
சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்த நபரோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ இரத்த தானம் செய்யக்கூடாது.
ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.
எச்.ஐ.வி பாதிப்பு உள்ளவர்கள் இரத்த தானம் செய்ய முடியாது.
கர்ப்பிணி பெண்களும் இரத்த தானம் செய்யக்கூடாது.
உடலில் பச்சை குத்தியவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.
காசநோய், டெங்கு, மாரடைப்பு மற்றும் சிறுநீரக நோய்கள் மற்றும் வலிப்பு பிரச்சனை உள்ளவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.