30 July 2025
Credit: GETTY
உடலில் புரதச்சத்து குறைபாடு பிரச்சனையை சந்திக்கும்போது, முட்டை மற்றும் சிக்கனை அதிகளவில் எடுத்துக் கொள்கிறார்கள்.
பழங்களை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது.
அதேநேரத்தில், நீங்கள் முழுமையான சைவ உணவு உண்பவராக இருந்தால், கவலைப்பட தேவையில்லை.
புரதச்சத்து நிறைந்த பல காய்கறிகள் உள்ளன.
அந்தவகையில், புரதச்சத்து நிறைந்த காய்கறிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
பச்சை பட்டாணி அதிக புரதச்சத்து நிறைந்த ஒரு காய்கறியாகும்.
ஒரு கப் பச்சை பட்டாணியில் சுமார் 8 கிராம் புரதம் உள்ளது.
பலரும் தங்களது உடலை ஆரோக்கியமாக வைக்க, ப்ரோக்கோலி எடுத்து கொள்கிறார்கள். ப்ரோக்கோலியில் 100 கிராமுக்கு சுமார் 2.8 கிராம் புரதம் உள்ளது.
ஒரு கப் வேகவைத்த கீரையில் 5.3 கிராம் புரதம் அடங்கியுள்ளது.
சைவ கோழி என்று அழைக்கப்படும் 100 கிராம் பலாப்பழத்தில், சுமார் 1.8 முதல் 2.5 கிராம் வரை புரதம் அடங்கியுள்ளது.