04 Nov 2026

எந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது ஆபத்தானது..?

Credit: Pexels

மதியம் சமைத்த உணவை இரவு உணவிற்காக மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும்போது, இதன் ஊட்டச்சத்துக்கள் குறைகின்றன.

சமைத்த உணவு

இருப்பினும், சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடல் நலத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

பிரச்சனை

ஒருமுறை வேகவைத்த சாதத்தை மீண்டும் சூடுபடுத்தக்கூடாது. இதனால் வாயுத்தொல்லை, வாந்தி மற்றும் ஃபுட் பாய்சன் போன்றவை ஏற்படலாம்.

சாதம்

கீரையில் நைட்ரேட்டுகள் மிக அதிகமாக உள்ளன. எனவே, இதை மீண்டும் சூடுபடுத்துவது நல்லதல்ல. இவ்வாறு செய்யும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கீரை

காளான்களில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை மீண்டும் சூடுபடுத்துவதால் அஜீரணம், வயிற்று வலி மற்றும் வாயுத்தொல்லை ஏற்படலாம்.

காளான்

சிக்கனை மீண்டும் சூடுபடுத்துவது வயிற்றுக் கோளாறை ஏற்படுத்தி, உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

சிக்கன்

முட்டையை வேகவைத்தாலும் சரி, பொரித்தாலும் சரி, அதை மீண்டும் சூடுபடுத்தினால் செரிமான ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும்.

முட்டை

உருளைக்கிழங்கு உணவுகளை மீண்டும் சூடுபடுத்துவது செரிமானத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

உருளை

 கீரையை போன்றே பீட்ரூட்டிலும் அதிக அளவில் நைட்ரேட்டுகள் உள்ளதால், இதனை மீண்டும் சூடுபடுத்துவது உடல்நலத்திற்கு நல்லதல்ல.

பீட்ரூட்

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தும்போது அது வினைபுரிக்கிறது. இது புற்றுநோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கலாம். 

எண்ணெய்