20 Dec 2025
Credit: Freepik
தயிர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால், அதை சரியான நேரத்தில் உட்கொள்ளாவிட்டால், அது தீங்கு விளைவிக்கும்.
தயிரில் புரதம், கால்சியம், ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இது பல பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்க உதவும்.
குளிர்காலத்தின்போது மதிய நேரத்தில் தயிர் உட்கொள்வது நல்லது.
தயிர் குளிர்ச்சியூட்டும் விளைவை கொண்டிருப்பதால், இரவில் அதை சாப்பிடுவது பிரச்சனையை தரும்.
இரவில் சாப்பிடும்போது சளி, இருமல் போன்ற பல பிரச்சனைகளை தரலாம்.
தயிரில் எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நல்ல அளவில் உள்ளன.
தயிர் சாப்பிடுவது கொழுப்பின் அளவை குறைக்கிறது. இது இதய நோய் அபாயத்தை குறைக்கும்.
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது.
இதன் காரணமாக, குளிர்காலத்தில் தயிரை எடுத்து கொள்ளும்போது கவனம் தேவை.