05 AUG 2025

நான் - ஸ்டிக் பாத்திரங்களை எப்போது மாற்ற வேண்டும்..?

Credit: GETTY

இன்றைய நவீன வாழ்க்கையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு சமையலறையிலும் நான் - ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

சமையலறை

இதில் சமைப்பது மிகவும் எளிது. மேலும், குறைந்த எண்ணெயிலேயே உணவு ரெடியாகிவிடும்.

எளிது

இருப்பினும், நான் - ஸ்டிக் பாத்திரங்களுக்கு ஒரு கால வரம்பு உண்டு. அந்த வரம்பை கடந்த பிறகு, அவற்றை பயன்படுத்துவது தீங்கு.

தீங்கு

அதன்படி, நான் - ஸ்டிக் பாத்திரங்களை எப்போது மாற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

எப்போது

ஒரு நான் - ஸ்டிக் பாத்திரத்தின் சராசரி ஆயுட்காலம் 2 முதல் 4 ஆண்டுகள் ஆகும்.

ஆயுட்காலம்

இது முற்றிலும் அதன் பயன்பாடு மற்றும் பராமரிப்பை பொறுத்தது.

பயன்பாடு

பாத்திரத்தின் மேற்பூச்சு உறிய தொடங்கினாலோ அல்லது கீறல்கள் ஏற்பட்டாலோ மாற்றுவது நல்லது.

மேற்பூச்சு

பாத்திரத்தில் உணவு ஒட்டினாலோ அல்லது கருகினாலோ மாற்றுவது முக்கியம்.

உணவு

கடாயில் வெப்பம் முழுமையாக பரவாமல் இருப்பதும், அந்த கடாய் பழையது என்று அர்த்தம்.

அர்த்தம்

இந்த முறையை பின்பற்றி நான் - ஸ்டிக் பாத்திரங்களை மாற்றி கொள்ளுங்கள்.

நான் - ஸ்டிக்