17 July 2025
Credit: GETTY
தயிர் இந்திய உணவு வகைகளில் ஓர் இன்றியமையாத உணவு பொருளாகும்.
இது சுவையானது மட்டுமல்ல, உடல் நலத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
இருப்பினும், தயிர் எப்போது சாப்பிடலாம், எப்போது சாப்பிடக்கூடாது என்பதை அறிவது முக்கியம்.
தயிரை சரியான நேரத்தில் எடுத்துகொள்வது நன்மைகளை தரும். அதே சமயம் தவறான நேரத்தில் சாப்பிடுவது பிரச்சனை தரும்.
தயிரில் புரதம், கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் செரிமான அமைப்பை வலுப்படுத்தும் புரோபயாடிக்குகள் உள்ளன.
தயிர் வயிற்றை குளிர்ச்சியடைய செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதுமட்டுமின்றி, சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை அளிக்கும்.
தயிரை மதிய வேளையிலும் மதிய உணவோடு எடுத்துக்கொள்ளலாம். இந்த நேரத்தில், உங்கள் உடலின் செரிமான அமைப்பு மிகவும் வலுவாக இருப்பதால் எளிதில் செரிமானம் ஆகும்.
கோடையில் தயிர் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இது வயிற்றை குளிர்விக்கும்.
இரவில் தயிர் சாப்பிடுவது இருமல் மற்றும் சளியை மோசமாக்கும். எனவே, இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.