07 NOV 2026
Credit: Getty
27 NOV 2026
Credit: Getty
உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது.
குறிப்பாக இந்தியாவிலும் ஏராளமான பொதுமக்கள் இந்த வாட்ஸ்அப் செயலியை தங்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய மிக முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், அது குறித்து CERT முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, பலரும் பயன்படுத்தும் இந்த வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக அது கூறியுள்ளது.
அந்த குறைபாடுகளை ஹேக்கர்கள் பயன்படுத்தும் நிலையில், மொபைல் போனை ஹேக் செய்து முக்கிய தகவல்கள் திருடப்படலாம் என கூறியுள்ளது.
Android, iOS, Mac, Windows ஆகிய செயலிகளில் இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக CERT தனது எச்சரிக்கையில் கூறியுள்ளது.
வாட்ஸ்அப் செயலி குறித்த இந்த எச்சரிக்கையை CERT நவம்பர் 26, 2026 அன்று பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளது.
அதாவது, இந்திய சைபர் குற்றவியல் ஒருங்கிணைப்பு மையம் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவது குறித்து எச்சரித்ததை தொடர்ந்து இதனை வெளியிட்டுள்ளது.
இந்த சிக்கல்களை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மோசடிக்காரர்கள், மொபைல் செயலியை ஹேக் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
குறுஞ்செய்திகள், இணைப்புகள், URL ஆகியவற்றின் மூலம் இந்த மோசடி அரங்கேறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.