23 SEP 2026

தனிநபர் கடன் : EMI செலுத்தவில்லை என்றால் என்ன ஆகும்?

Credit: Getty

தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் தங்களது பண தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள வங்கிகள் வழங்கும் தனிநபர் கடனை வாங்குகின்றனர். 

கடன்

இந்த தனிநபர் கடனை வாங்குவதை விடவும் அதனை திருப்பி செலுத்துவது தான் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. 

தனிநபர் கடன்

காரணம், தனிநபர் கடனை திருப்பி செலுத்தும்போது மாத தவணைகளை முறையாக செலுத்த வேண்டும். 

மாத தவணை

ஒருவேளை, ஏதேனும் ஒரு மாத தவணையை செலுத்த தவறினால் சில சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிடும்.

தவற விடுதல்

தனிநபர் கடனை முறையாக திருப்பி செலுத்தவில்லை என்றால், அது நிதியை பாதிப்பது மட்டுமன்றி, எதிர்காலத்தில் கடன் பெற முடியாமல் செய்யும் வாய்ப்பு உள்ளது. 

நிதி பாதிப்பு

மாத தவணை செலுத்த தவறினால் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 2 சதவீதம் வரை தாமத கட்டணம் விதிக்கப்படும். 

கட்டணம்

இதன் காரணமாக செலுத்த தவறிய மாத தவணைக்கு கூடுதல் வட்டி விதிக்கப்படும். இது ஒட்டுமொத்த கடன் தொகையையும் அதிகரிக்கும்.

கூடுதல் வட்டி

தனிநபர் கடனில் மாத தவணையை செலுத்த தவறும் பட்சத்தில் அது சிபில் ஸ்கோரை மிக கடுமையாக பாதிக்கும். 

சிபில் ஸ்கோர்

அதாவது, ஒவ்வொரு முறை மாத தவணையை தவறவிடும் பட்சத்திலும் 50 முதல் 70 புள்ளிகள் வரை சிபில் ஸ்கோர் குறையக்கூடும். 

50 - 70 புள்ளிகள்

தொடர்ச்சியாக 90 நாட்களுக்கு மேல் மாத தவணை செலுத்தவில்லை என்றால், கடன் கணக்கு செயல்படாத சொத்தாக மாற்றப்படும்.

90 நாட்கள்