26 OCT 2026
Credit: Getty
உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிக அளவு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் மட்டும் சுமார் 500 மில்லியன் மக்கள் தங்களது தனிப்பட்ட தேவைகள் உள்ளிட்டவற்றுக்காக வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.
பலருக்கும் மிகவும் பயனுள்ள மற்றும் எளியமையாக பயன்படுத்தும் செயலியாக இருந்தாலும், இதில் மோசடி மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக போலி வேலைவாய்ப்பு செய்திகள், ஆஃபர் உள்ளிட்டவை பயனர்களை சிக்கலில் சிக்க வைத்துவிடும் ஆபத்துக்களை கொண்டுள்ளன.
எனவே வாட்ஸ்அப் செயலியில் வரும் குறுஞ்செய்திகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்பது மிக அவசியமாக உள்ளது.
உங்களுக்கு தெரியாத எண்களில் இருந்து வேலைவாய்ப்பு, சலுகை, தள்ளுபடி ஆகியவை குறித்து குறுஞ்செய்தி வந்தால் அது குறித்து கவனமாக இருங்கள்.
சில சமையங்களில் இத்தகைய குறுஞ்செய்திகளுக்கு வேண்டாம் என நீங்கள் பதில் அளித்தாலும் கூட மோசடி செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
வங்கி, அரசு துறைகளில் இருந்து அனுப்பும் வகையில் உங்களுக்கு ஏதேனும் லிங்குகள் வந்தால் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கூடாது.
இத்தகைய லிங்குகளில் லாக் இன் செய்ய வேண்டும் என்று கூறப்படும்போது உங்களது விவரங்களை உள்ளிட்டால் அவை திருடப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, சந்தேகத்திற்கு இடனமான குறுஞ்செய்திகள், போன் கால்கள், லிங்குகள் ஆகியவற்றை குறித்து கவனமாக செயல்படுங்கள்.