20 SEP 2026

கடனில் சிக்காமல் தப்பிக்க இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

Credit: Getty

மனிதர்களுக்கு எப்போதுமே பண தேவை இருந்துக்கொண்டே தான் இருக்கும். இத்தகைய சூழலில் அவர்கள் சேமித்து வைத்திருந்தால் அந்த பணத்தை பயன்படுத்துவார்கள். 

பண தேவை

ஒருவேளை சேமிப்பு அல்லது முதலீடு என எதுவுமே இல்லை என்றால், அவர்கள் தங்களது நிதி தேவைக்காக கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுவர். 

கடன்

இவ்வாறு தேவையின்போதெல்லாம் கடனுக்கு மேல் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் வட்டி வலையில் சிக்கி தவிப்பவர் பலர் உள்ளனர். 

வட்டி

இந்த நிலையில் தான், கடன் வாங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவற்றை குறித்து தெரிந்துக்கொள்வது அவசியம்.

முக்கிய அம்சங்கள்

கடன் என்பது தேவையை சார்ந்ததாகவே இருக்க வேண்டும். அதாவது ஆசைக்காக கடன் வாங்குவதை விடவும் தேவைக்காக கடன் வாங்க வேண்டும்.

தேவை

உதாரணமாக கல்விக்காக கடன் வாங்குவது, வீட்டு கட்ட, மருத்துவ செலவுகள், ஆகியவற்றுக்கு வாங்கலாம். இதுவே சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

அத்தியாவசியம்

கடன் வாங்க வேண்டிய தேவை உள்ள பணத்தை ஏற்கனவே வீட்டில் இருக்கும் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் ஈடுசெய்ய முடியுமா என பார்க்க வேண்டும்.

ஈடு செய்தல்

ஏதேனும் பண தேவை ஏற்படும் என்றால், அதனை முன்கூட்டியே கணித்து மாதம் மாதம் சிறுக சிறுக சேமித்து பயன்படுத்தலாம்.

சேமிப்பு

கடனுக்கான பணத்தை குறைப்பதை காட்டிலும், கடனுக்கான தேவையை குறைத்துக்கொள்வது மிகவும் உதவியாக இருக்கும்.

தேவை

ஒருவரின் மாதாந்திர கடன் தவணையின் அளவு அவரது மாத வருமானத்தில் 25 முதல் 30 சதவீதத்திற்குள்ளே இருக்க வேண்டும். 

அளவு