06 SEP 2026

பணவீக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

Credit: GETTY

நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது பணவீக்கம். காரணம், பணவீக்கம் அதிகரித்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரும்.

பணவீக்கம்

தினசரி பயன்படுத்தும் பால், அரிசி, காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் உயரும் பட்சத்தில் மாத செலவும் கனிசமாக உயரும்.

அத்தியாவசியம்

இவ்வாறு விலைவாசி உயர்வு காரணமாக மாத செலவுகள் அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் நிதி சுமையை சந்திக்கும் நிலைக்கு நடுத்தர வர்கத்தினர் தள்ளப்படுகின்றனர்.

விலைவாசி

இத்தகைய பல்வேறு சிக்கல்களை பணவீக்கத்தால் ஏற்படும் விலைவாசி உயர்வு உண்டாக்கும் பட்சத்தில் அதில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என பார்க்கலாம்.

பாதுகாப்பு

நம்மால் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது. ஆனால், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வாழ பழகிக்கொள்வது மிகவும் உதவியாக இருக்கும்.

வாழ்க்கை முறை

ஒவ்வொரு மாதமும் சம்பளம் வருவதற்கு முன்னதாகவோ அல்லது சம்பளம் வந்த பிறகோ அந்த மாதத்தில் என்ன என்ன செலவுகளை செய்ய வேண்டும் என திட்டமிடவேண்டும்.

திட்டமிடல்

மாத தொடக்கத்திலேயே தேவையான பொருட்களுக்கான பட்டியல் ஒன்றை தயார் செய்ய வேண்டும். மிகவும் அத்தியாவசிய பொருட்களுக்கு இதில் முக்கியத்துவம் தர வேண்டும்.

பட்டியல்

ஒவ்வொரு மாதமும் ஏற்படும் வீண் செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த கூடுதல் செலவுகளை தவிர்க்க முடியும்.

கூடுதல் செலவு

உணவு வீணாவது, உணவு பொருட்கள் வீணாவது, வீட்டிற்கு தேவையற்ற பொருட்களை வாங்குவது என தேவையில்லாத, தவிர்க்கக்கூடிய செலவுகளை தவிர்ப்பது நல்லது.

வீணாவது

செலவுகளை முறைப்படுத்தி, வரவை முறையாக செலவு செய்தாலே இத்தகைய நிதி சிக்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்

முறைப்படுத்துவது