18 Nov 2026
Credit: Pexels
பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப, உங்கள் உணவுமுறையையும் மாற்றிக்கொள்ள வேண்டும். நவம்பர் மாதத்தில் குளிர் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், உங்கள் அன்றாட உணவில் சில சிறப்பு உணவுகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சல், சளி போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.
குளிர்காலத்தில் நண்டு உள்ளிட்ட உணவுகளை எடுத்துகொள்வது சளி பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும்.
மேலும், மாலை நேரங்களில் சிக்கன் அல்லது மட்டன் சூப்பை சாப்பிடலாம். இது தொண்டை வலி பிரச்சனைகளுக்கு இதமான உணர்வை கொடுக்கும்.
குளிர்காலத்தில் உங்கள் உணவில் வெல்லத்தை குறைந்த அளவில் சேர்த்து கொள்ளலாம். இது உடலை வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, சளி மற்றும் காய்ச்சல் காலங்களில் வெல்லம் உட்கொள்வது நன்மை பயக்கும்.
ஆளி விதைகளுக்கு உடல் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை உண்டு. அவற்றை வறுத்து பொடியாக்கி, தினமும் ஒரு ஸ்பூன் அளவு உட்கொள்ளலாம்.
குளிர்காலத்தில் எள் சிறந்தது. பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, எள் உடலுக்கு வெப்பத்தையும் அளிக்கிறது. இதை பச்சையாகவோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம்.
குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் பாதாம் மற்றும் வால்நட் போன்ற ட்ரை ப்ரூட்ஸ்களை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
குளிர்காலத்தில் குறைந்த அளவு நெய்யையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
குளிர்காலத்தில் உங்கள் உணவில் இஞ்சி, கொத்தமல்லி, துளசி, மஞ்சள், ரோஸ்மேரி, மிளம் போன்ற சில சிறப்பு மசாலா பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்.