02 Nov 2026

தினமும் உங்களுக்கு சோர்வு ஏற்பட காரணம் என்ன..?

Credit: Pexels

தினமும் போதுமான அளவு தூங்காமல் இருப்பது, நாள் முழுவதும் சோர்வு மற்றும் மந்த உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.

மந்த உணர்வு

உடலில் நீர்ச்சத்து குறைபாடு பலவீனத்தையும், சோர்வையும் ஏற்படுத்தக்கூடும்.

நீர்ச்சத்து

சரியான மற்றும் சத்தான உணவை உண்ணாததால், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காது.

ஆற்றல்

இரும்புச்சத்து, வைட்டமின் பி12 அல்லது வைட்டமின் டி குறைபாடும் சோர்வை ஏற்படுத்தலாம்.

வைட்டமின் பி12

தொடர்ச்சியான மன அழுத்தம் உடலையும், மனதையும் சோர்வடைய செய்யும்.

மன அழுத்தம்

போன் அல்லது டிவியை அதிக நேரம் பார்ப்பது கண் மற்றும் மூளைச் சோர்வை ஏற்படுத்தும்.

மூளை சோர்வு

நீண்ட நேரம் எந்த உடல் செயல்பாடும் இல்லாமல் இருப்பது சோர்வு உணர்வுக்கு வழிவகுக்கும்.

உடல் செயல்பாடு

அதிகப்படியான டீ, காபி அல்லது துரித உணவுகளை உட்கொள்வதும் உடலின் ஆற்றலை பாதிக்கக்கூடும்.

துரித உணவு

தெளிவான காரணம் ஏதுமின்றி சோர்வு நீண்ட நாட்களாக இருந்தால், கவலை கொள்ள வேண்டிய விசயம் இது.

கவலை

இப்படியான சூழ்நிலையில், நீங்கள் ஒரு மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ள வேண்டும். 

பரிசோதனை