03 NOV 2026
Credit: Getty
உலோகங்களில் மிகவும் சிறந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளதுதான் தங்கம். மற்றவை விலை உயர்ந்தாலும் தங்கத்துக்கு ஈடு கொடுக்க முடியாது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு பிளாட்டினம் விலை அதிகமாக இருந்தது.
ஆனால், தற்போதைய நிலவரப்படி பார்த்தால் பிளாட்டினத்தை பின்னுக்கு தள்ளி தங்கம் முன்னிலையில் உள்ளது.
இதற்கு காரணம், மக்களுக்கு தங்கத்தின் மீது உள்ள நம்பிக்கை மற்றும் ஆசை தான். உலக அளவில் ஒரே அளவிலான ஈர்ப்பை கொண்டுள்ளதே இதற்கு காரணம்.
2026 ஆம் ஆண்டில் சில மாதங்கள் வெள்ளி தொடர் சரிவை சந்தித்தது. அதாவது, ஒரு கிலோ ரூ.4.2 லட்சம் வரை உயர்வை சந்தித்தது.
ஆனால், அதன் பிறகு தொடர் சரிவை சந்திக்க தொடங்கிய வெள்ளி தற்போது ஒரு கிலோ வெறும் ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அப்போது பலரும் வெள்ளியில் முதலீடு செய்து இருந்தாலும், அதை அவர்கள் சந்தையில் விற்பனை செய்ய முயன்றபோது 50 சதவீத அளவிற்கே எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக பலரும் தங்கம் தான் பாதுகாப்பான முதலீடு என மீண்டும் தங்கத்திற்கு திரும்பிய நிலையில், வெள்ளி சரிவை சந்திக்க தொடங்கியது.
மீண்டும் ஈரான் மற்றும் அமெரிக்கா போர் தீவிரமடையும் பட்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளி நிலையற்ற தன்மைக்கு செல்லலாம் என கூறப்படுகிறது.
குறிப்பாக தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லலாம் என்றும், வெள்ளி ஒருகிலோ ரூ.2 லட்சத்திற்கு கீழ் செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.