27 OCT 2026

Credit: Getty

மாஸ்குடு ஆதார் என்றால் என்ன : சிறப்புகள் என்ன என்ன?

இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது தான் ஆதார் கார்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் கட்டாயமாக உள்ளது. 

ஆதார்

குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ப்ளூ ஆதார் கார்டும், மற்றவர்களுக்கு சாதாரண ஆதார் கார்டும் வழங்கப்படுகிறது.

ப்ளூ ஆதார்

ஆதார் கார்டில் ஒருவரின் பெயர், முகவரி, பாலினம், வயது உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

முக்கிய தகவல்கள்

இந்த நிலையில், பல இடங்களில் அடையாள ஆவணமாக ஆதார் கேட்கப்படும் நிலையில், அதில் இருக்கும் விவரங்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

திருட்டு

இந்த சிக்கலில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக தான் அரசு மாஸ்குடு ஆதார் கார்டை அறிமுகம் செய்துள்ளது.

மாஸ்குடு ஆதார்

பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.

பாதுகாப்பு

இந்த மாஸ்குடு ஆதார் கார்டு என்பது தனியுரிமையை மேம்படுத்தவும், ஆதார் தகவல்கள் வெளிப்படையாக இருப்பதை தடுக்கவும் உதவி செய்கிறது. 

மறைப்பு

ஆதார் கார்டில் உள்ளதை போலவே இதிலும் அனைத்து விவரங்களும் இருக்கும் ஆனால், சற்று வித்தியாசமாக இருக்கும். 

வித்தியாசம்

குறிப்பாக, ஆதார் கார்டில் 12 இலக்க எண்கள் இடம்பெற்று இருக்கும். ஆனால், இந்த மாஸ்குடு ஆதார் கார்டில் 8 இலக்க எண்கள் மறைக்கப்பட்டு இருக்கும். 

4 எண்கள்

கடைசியில் இருக்கும் வெறும் 4 இலக்க எண்கள் மற்றுமே தெரியும். இதனை ஸ்கேன் செய்யும் பட்சத்தில் அனைத்து விவரங்களும் கிடைக்கும்.

விவரங்கள்