01 Nov 2026

இரத்த அழுத்த மாத்திரையை  தவறவிட்டால் என்ன நடக்கும்?

Credit: Unsplash

91,000-க்கும் மேற்பட்டோரை கொண்டு நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு உயர் இரத்த அழுத்த சிகிச்சையின் நிலைத்தன்மையை விளக்குகிறது.

ஆய்வு

மருந்தை சீராக உட்கொண்டவர்களுக்கு மேல் இரத்த அழுத்தம் சராசரியாக 5.2 mmHg வரை குறைந்தது.

அழுத்தம்

மருந்து எடுப்பதில் ஒழுங்கற்ற தன்மை உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தக் குறைவு வெறும் 3.0 mmHg மட்டுமே இருந்தது.

குறைவு

சீராக மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான இதய பாதிப்புகள் 11% குறைந்துள்ளது.

பாதுகாப்பு

 மருந்தை ஒரு நாள் மறந்துவிட்டாலோ அல்லது ஒரு மாத்திரை தவறிவிட்டாலோ அது உடனே மாரடைப்பை ஏற்படுத்தாது.

தவறு

உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் வெளிப்படையான எந்தவித அறிகுறிகளையும் காட்டாமல் உடலுக்குள் தீங்கை விளைவிக்கும்.

அறிகுறி

மாத்திரைகளை முறையாக உட்கொள்ளாவிட்டால், இரத்த அழுத்தம் கட்டுப்பாடின்றி உயர்ந்து நாளடைவில் இரத்த நாளங்கள் சேதமடையும்.

காலம்

முறையற்ற சிகிச்சை இதய நோய், பக்கவாதம், இதயச் செயலிழப்பு மற்றும் சிறுநீரகப் பாதிப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

இதய நோய்

மருத்துவரின் பரிந்துரையின்றி இரத்த அழுத்த மாத்திரைகளை தாங்களாகவே எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது.

எச்சரிக்கை

மருந்தை மறந்துவிடுவதைத் தவிர்க்க அலாரம் வைப்பது அல்லது மாத்திரை பெட்டிகளைப் பயன்படுத்துவது உதவியாக இருக்கும்.

தீர்வு