03 OCT 2026
Credit: Getty
உலக அளவில் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு அம்சம், மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
பலரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை செயற்கை நுண்ணறிவின் சாட்பாட்களுடன் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பங்கள் குறித்து கருத்து கேட்பது, தங்களது மனதில் உள்ள எண்ணங்களுக்குன் கருத்து கேட்பது ஆகியவற்றை செய்கின்றனர்.
பலரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அந்தரங்கம் குறித்து செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களிடம் கேட்கின்றனர்.
அவ்வாறு அந்தரங்கம் குறித்து தேடும் பொதுமக்கள் அவற்றை டெலிட் செய்துவிட்டால் போதும் என நினைக்கின்றனர்.
ஆனால், சாட்ஜிபிடியில் டெலிட் செய்யப்படும் தேடல்கள் அதன் பிறகு என்ன ஆகிறது என்பது குறித்து பலரும் தெரிந்துக்கொள்வது இல்லை.
பொதுமக்கள் தங்களது சாட் ஜிஸ்டரியை டெலிட் செய்தாலும், அது 30 நாட்கள் ஓபன் ஏஐ-ல் அப்படியே இருக்கும்.
அவ்வாறு டெலிட் செய்யப்படும் சாட்களையோ அல்லது தேடல்களையோ பயனர்களால் திரும்ப பெற முடியாது.
ஒருவேளை பயனர்கள் தங்களுக்கு தெரியாமலோ அல்லது தவறுதலாக டெலிட் செய்தாலோ அது குறித்து எதுவும் செய்ய முடியாது.
சாட்ஜிபிடியை பயன்படுத்தும் பொதுமக்கள் அதன் சாதக பாதகங்களை தெரிந்துக்கொண்டு பயன்படுத்துவது மேலும் சிறப்பானதாக இருக்கும்.