11 Jan 2026

வெறும் வயிற்றில் காபி குடித்தால் என்ன ஆகும்?

Credit: Freepik

காலையில் எழுந்த உடன் காபி குடிப்பது பலரின் பழக்கமாக இருக்கிறது. அது உடலுக்கு உகந்ததா என்பதை பார்க்கலாம்

காபி பெரும்பாலும் வயிற்றின் அமில உற்பத்தியை தூண்டுகிறது.

வெறும் வயிற்றில் காபி குடிப்பது சிலருக்கு செரிமானம் சிக்கல் ஏற்பட்டு, வயிறு வீக்கம், வாயு அல்லது நெஞ்சு வலி போன்ற அறிகுறிகளை உண்டாக்கலாம்.

காபி உங்கள் ரத்த சர்க்கரை அளவையும் பாதிக்கலாம், குறிப்பாக வெறும் வயிற்றில் குடிப்பதால் சர்க்கரை அளவில் மாறுபாட ஏற்பட வாய்ப்புள்ளது.

பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு வெறும் வயிற்றில் காபி குடிப்பது உடல் பெரிய தீங்கு விளைவிக்காது என நிபுணர்கள் கூறுகின்றர்.

காபியில் உள்ள காபீன் உடலில் கார்டிசோல் என்ற மனஅழுத்த ஹார்மோனின் அளவை உயர்த்துகிறது.

காலையில் மிக ஸ்ட்ராங்காக காபி குடிப்பதை தவிர்க்கலாம்

காபி குடிக்கும் முன்பு தண்ணீர் குடிப்பது நல்லது.

வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் பலவீனம், நடுக்கம் போன்ற மாற்றங்கள் உடலில் ஏற்படலாம்.

காலை உணவுக்குப் பிறகோ, குறைந்தது ஒரு சிறிய உணவை உட்கொண்ட பிறகோ காபி குடிப்பது உடலுக்கு மிக நல்லது.