10 Oct 2026

டெஸ்க் வேலையா? உடல் இறுக்கத்தை குறைக்கும் வழிகள்..!

Credit: Freepik

மேசையில் அமர்ந்து வேலை செய்யும்போது கழுத்து ஒரே நிலையில் இருக்கும். எனவே, உங்களை கழுத்தை அடிக்கடி இருபுறம் அசைப்பது முக்கியம்.

முக்கியம்

ஒவ்வொரு மணி நேரமும் அமர்ந்த நிலையில் உடலை வலது மற்றும் இடது புறம் திருப்புங்கள். இது முதுகு வலியில் இருந்து நிவாரணம் தரும்.

நிவாரணம்

முடிந்தவரை நேராக உட்கார முயற்சி செய்யுங்கள். கழுத்தை மட்டும் முன்புறம் வளைத்து உட்காருவது முதுகெலும்பை பாதிக்கும். 

முதுகெலும்பு

நாற்காலியில் அமர்ந்தபடி, உங்களை கால்களை நீட்டி மடக்கவும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

இரத்த ஓட்டம்

அலுவலகத்தில் உள்ள லிப்ட்க்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள். இது உங்கள் இதயத்திற்கு நல்லது.

படிக்கட்டு

உங்களுக்கு மன அழுத்தமாக இருந்தால், சில நிமிடங்கள் கண்ணை மூடி சுவாசியுங்கள். இது உங்கள் மனத்தை அமைதிப்படுத்தும்.

அமைதி

மனநல பிரச்சனையை குறைக்க, கழுத்தை வலஞ்சுழியாகவும், இடஞ்சுழியாகவும் சிறு சிறு இடைவெளியில் சுழற்றவும்.

இடைவெளி

வேலையின் அழுத்ததால் உங்கள் தோள்பட்டை தொய்வடையும். எனவே, அவற்றை வட்டமாக சுழற்றுவதன் மூலம் தளர்த்தலாம்.

தொய்வு

எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே நல்ல எதிர்காலம் கிடைக்கும். 

பணிச்சுமை

எனவே, நாள்தோறும் கிடைக்கும் இடைவெளியில் உடலை வளைத்து உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. 

உடற்பயிற்சி