25 Nov 2026

குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை பேணுவதற்கான வழிகள்..!

Credit: Freepik

குளிர்காலத்தில் உடல்நலம் எளிதாக பாதிக்கப்படும். இந்தநிலையில், வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.

பாதிப்பு

பல அடுக்குகளாக ஆடைகளை அணிவது உடலை சூடாக வைக்கும். அதன்படி, அதிக குளிர் இருந்தால் கை மற்றும் காலுறைகள் அணிவது அவசியம்.

காலுறைகள்

நோய்த்தொற்றுகள் பரவுவதை தடுக்க உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள். வெளியில் இருந்து வந்த பிறகு கைகளை கழுவுவது மிகவும் அவசியம்.

நோய்த்தொற்று

குளிர்காலத்தில் முடிந்தவரை தண்ணீரை சூடுப்படுத்தி குடியுங்கள். இது சளி மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும்.

சுடுதண்ணீர்

குளிர்காலத்தில் தாகம் குறைவாக எடுத்தாலும், உடலை நீரேற்றுத்துடன் வைப்பது முக்கியம். அதன்படி, அதிகளவில் தண்ணீர் குடிப்பது வறட்சியை தடுக்கும்.

தாகம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற சத்தான உணவுகளை உண்ணலாம். சூப் சாப்பிடுவது உடலை சூடாக வைக்கும்.

நோய் எதிர்ப்பு

குளிர்காலத்தில் உடல் நலத்திற்கு சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். வீட்டிற்குள் செய்யும் உடற்பயிற்சி, யோகா அல்லது நடைப்பயிற்சி செய்யலாம்.

உடற்பயிற்சி

நல்ல ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவது அவசியம்.

தூக்கம்

குறைவான சூரிய ஒளி மனநலத்திற்கு தீங்கு தரும். வெளிச்சம் உள்ளே வர ஜன்னல்களை திறந்து வைக்கலாம்.

சூரிய ஒளி

குளிர்காலத்தில் மாரடைப்பு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும். எனவே, கவனமாக இருப்பது அவசியம். உடல்நலக்குறைவின் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் மருத்துவரிடம் செல்லலாம். 

மாரடைப்பு