26 Nov 2026
Credit: Freepik
ப்ரிட்ஜில் உள்ள துர்நாற்றத்தை நீக்க, ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டி, ப்ரிட்ஜூக்குள் வைக்கலாம்.
வினிகரை ஒரு தட்டில் வைத்து ப்ரிட்ஜூக்கு வைக்கவும். அதன் நறுமணம் ப்ரிட்ஜில் உள்ள துர்நாற்றத்தை நீக்கும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் சமையல் சோடாவை நிரப்பி, ப்ரிட்ஜின் ஒரு மூலையில் வைக்கலாம். இது காற்றில் உள்ள துர்நாற்றத்தை உண்டாக்கும் துகள்களை உறிஞ்சும்.
காபி தூளை ஒரு தட்டில் கொட்டியும் ப்ரிட்ஜூக்குள் வைக்கலாம். இதன் நறுமணம் கெட்ட வாசனையை நீக்கும்.
ப்ரிட்ஜூக்குள் அடிக்கும் கெட்ட வாசனையை நீக்க ஆரஞ்சு பழத்தின் தோலையும் வைக்கலாம்.
ப்ரிட்ஜை சுத்தம் செய்த பிறகு, ஒரு பஞ்சு உருண்டையை ரோஸ் வாட்டரில் நனைத்து வைக்கலாம். இதுவும் கெட்ட வாசனையை விரட்டும்.
வாரத்திற்கு ஒரு வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பை கலந்து ப்ரிட்ஜை சுத்தம் செய்யலாம். இது பாக்டீரியாவை அழித்து, கெட்ட வாசனையை ஓடவிடும்.
ப்ரிட்ஜை முழுவதுமாக சுத்தம் செய்ய நினைத்தால், பவர் ஆஃப் செய்ய பட்டுள்ளதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சோதனை செய்துவிட்டு சுத்தம் செய்வது நல்லது.
ப்ர்ட்ஜின் பின் பகுதியை சுத்தம் செய்யும்போது, அடியில் தண்ணீர் வெளியேறும் அழுக்கு படிந்த வெள்ளை நிற பாக்ஸையும் சுத்தம் செய்வது கெட்ட வாசனை உண்டாகுவதை தடுக்கும்.
வாரத்திற்கு ஒருமுறை ப்ரிட்ஜை முழுமையாக சுத்தம் செய்வது முக்கியம். ஏனெனில், ப்ரிட்ஜில் உள்ள துர்நாற்றத்தை நீக்குவதற்காக முதல் மற்றும் மிக முக்கியமான படி.