13 August 2026

மகுடம் படத்திற்காக விஷால் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Credit: Instagram

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராகவும், தற்போது இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஷால்.

இவர் கடந்த 2004ம் ஆண்டில் தமிழில் இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான செல்லமே என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

தற்போதுவரை சினிமாவில் நாயகனாக நடித்துவரும் விஷலை ரசிகர்கள் புரட்சி தளபதி என்றும் பாசமுடன் அழைக்கிறார்கள். 

இவர் அர்ஜுனின் வேதம் என்ற படத்தில் உதவி இயக்குநர் மற்றும் நடிகராக பணியாற்றி சினிமாவில் தனது முதல் அனுபவத்தை ஏற்படுத்தியிருந்தார். . 

பின் நடிகர் அர்ஜுனின் உந்துதலால் சினிமாவில் நடிகராக உருவெடுத்தார், இதை விஷாலும் பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.

செல்லமே படத்தின் மூலம் ஹீரோவானாலும், இவருக்கு பிரபலத்தை கொடுத்த படம் சண்டக்கோழி. இந்த படம் மிகவும் சிறப்பான வரவேற்பை விஷாலுக்கு கொடுத்தது.

மேலும் இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் வெளியான தாமிரபரணி என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். 

கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கும் மேல் சினிமாவில் நடிகராக இருந்த விஷால், மகுடம் என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். 

மகுடம் திரைப்படத்தி இவர் இயக்கி, அவரே ஹீரோவாக மொத்தம் 3 வேடங்களில் நடித்துள்ளார். ஆக மொத்தத்தில் ஒரு கேங்ஸ்டர்ஸ் படமாக உருவாகியுள்ளது.

மகுடம் படத்தை இயக்கி, நடிப்பதற்கு விஷால் கிட்டத்தட்ட ரூ 30 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். மேலும் லாபத்திலிருந்தும் பங்கு உண்டு.