Credit: Instagram

29  November 2026

என்னுடைய ஒரிஜினல் பெயர் அதுதான் - விஜய் ஆண்டனி

Credit: Instagram

தென்னிந்திய மொழி சினிமாவில் இசையமைப்பாளராக மற்றும் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய் ஆண்டனி.

இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக சினிமாவில் நுழைந்து, பின் திரைப்படங்களில் கதாநாயகனாக அறிமுகமானார்.

விஜய் ஆண்டனி கடந்த 2025ம் ஆண்டில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தில் வெளியான சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளரானார்.

ஆனால் விஜய் ஆண்டனி சினிமாவில் முதல் முதலில் இசையமைப்பாளராக ஒப்பந்தமான படம் ஜீவா நடித்த டிஸ்யூம் ஆகும்.

இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி முதல்வர் விஜய் முதல் விஷால் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்த வரிசையில் இவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம்தான் நான். இதை இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கியிருந்தார்.

கடந்த 2012ம் ஆண்டு முதல் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த விஜய் ஆண்டனி, பேக் டூ பேக் கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார்.

இவரின் நடிப்பில் தற்போது வரை சினிமாவில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது இறுதியாக இவரின் நடிப்பில் அப்பா குட்டி என்ற படம் வெளியானது.

விஜய் ஆண்டனி தற்போது மற்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்காமல், தனது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு இசையமைக்கிறார்.

மேலும் முன்பு பேட்டியில் பேசிய விஜய் ஆண்டனி, தனது ஒரிஜினல் பெயர் என்ன என கூறியுள்ளார். அவரின் உண்மையான பெயர் பிரான்சிஸ் ஆண்டனி என கூறினார்.