15 Nov 2026

பிரிஞ்சி இலைகளின் பல்வேறு வீட்டு பயன்பாடுகள்..!

Credit: Pexels

வீட்டு வேலைகள் முதல் சரும பராமரிப்பு வரை அஞ்சறைப்பெட்டியில் உள்ள பிரிஞ்சி இலைகளை பயன்படுத்தலாம்.

பிரிஞ்சி இலை

இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மசாலாப் பொருளும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

மருத்துவ குணம்

புலாவ், பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பிரிஞ்சி இலைகள், தனக்குள் பல சத்துக்களை அடக்கி வைத்துள்ளது.

சத்துக்கள்

பிரிஞ்சி இலைகளை எரித்து அதன் புகையை வீடு முழுவதும் பரப்புவதன்மூலம், நமக்கு தேவையான மன நிம்மதியை தருகிறது.

மன நிம்மதி

பிரிஞ்சி இலை நீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தலாம். இது செரிமானத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

செரிமானம்

பிரிஞ்சி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை சருமத்திற்கு டோனராக பயன்படுத்தலாம்.

டோனர்

அரிசி, கோதுமை அல்லது பருப்புகளில் பிரிஞ்சி இலைகளை வைப்பது, அவற்றில் அந்துப்பூச்சிகள் மற்றும் பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கிறது.

பூச்சிகள்

பிரிஞ்சி இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரைக் கொண்டு தலையில் மசாஜ் செய்தால் பொடுகு நீங்கும்.

பொடுகு

பிரிஞ்சி இலை எண்ணெயைக் கொண்டு நெற்றியிலோ அல்லது தலையிலோ மசாஜ் செய்தால் தலைவலி நீங்கும்.

தலைவலி

பிரிஞ்சி இலையின் மணம் கரப்பான்பூச்சிகள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளை விரட்டும். இதை அலமாரிகளிலோ அல்லது மூலைகளிலோ வைக்கலாம்.

ஈக்கள்