31 Dec 2025

குழந்தை பெற்றுக்கொள்கின்ற எண்ணம் இல்லை - வரலட்சுமி சரத்குமார்

Credit: Social Media

நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி

கடந்த 2012 ஆம் ஆண்டு சிம்புவிற்கு ஜோடியாக போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அவருக்கு இயக்குநர் பாலாவின் தாரதப்பட்டை படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நெகட்டிவ் வேடங்களில் நடித்து அசத்தினார்.

தமிழில் விஜய்யின் சர்கார் படத்தில் கோமளவள்ளி என்ற நெகட்டிவ் வேடத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

தொடர்ந்து விக்ரம் வேதா, இரவின் நிழல், ராயன் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

சுந்தர்.சி இயக்கத்தில் இவர் நடித்த மத கஜ ராஜா படம் 13 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

இவர் கடந்த ஆண்டு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில், தனக்கு குழந்தை பெற்றுக்கொள்கிற ஐடியா இல்லை என்றார்.

மேலும் பேசிய அவர் தனக்கு தனது தங்கை, நண்பர்கள், நாய் ஆகியவற்றுக்கு நான் ஏற்கனவே தாய் தான் என்றார்.