22 July 2025
Credit: GETTY
முகத்தில் முகப்பருக்கள், கருவளையம், பொலிவின்மை ஆகியவை ஏற்படுவதன் காரணமாக முகத்தின் அழகே பாழாகிறது. இந்த நிலையில் தான் பல சிக்கல்களுக்கு ஒரே தீர்வாக ஐஸ் கட்டி உள்ளது.
ஐஸ் கட்டிகளை சருமத்தில் பயன்படுத்துவது பல நன்மைகளை பெற உதவும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐஸ் கட்டி பயன்படுத்துவதால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
முகத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்தி மசாஜ் செய்வது, முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். இதன் காரணமாக முகம் உடனடியாக பொலிவாக மாறும்.
கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் மீது ஐஸ் கட்டி வைப்பது, கருவளையங்களை குறைக்க உதவி செய்யும். அதுமட்டுமன்றி, கண்களுக்கு கீழ் உருவாகும் வீக்கத்தையும் குறைக்கும்.
முகப்பருக்களை சுருங்க செய்யும் தன்மை ஐஸ் கட்டிக்கு உள்ளது. எனவே உங்களுக்கு அடிக்கடி முகப்பரு வருகிறது என்றால் நீங்கள் ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவது நல்ல பலன்களை தரும்.
ஐஸ் கட்டியை முகத்தில் பயன்படுத்துவது சருமத் துளைகளில் உள்ள அழுக்களை வெளியேற்ற உதவும். இதன் மூலம் சருமத் துளைகள் சுருங்கி முகம் மிகவும் அழகானதாக மாறும்.
முகத்தில் அவ்வப்போது ஐஸ் கட்டியை தேய்ப்பது சருமம் எளிதில் சுருங்காமல் இருக்க வழிவகை செய்யும். இதன் மூலம் சருமம் எப்போது இளமையாகவே இருக்கும்.
அடிக்கடி வெயிலில் செல்லும் நபர்கள் சருமம் சார்ந்த சிக்கல்களை எதிர்க்கொள்வர். இந்த நிலையில் ஐஸ் கட்டி முகத்தில் ஏற்டும் டேனை நீக்கி, குளிர்ச்சியை தரும்.
மேக் அப் போடுவதற்கு முன்பு ஐஸ் கட்டியை பயன்படுத்துவது சிறப்பானது. அதாவது, மேக் அப்பை நீண்ட நேரம் அப்படியே வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
முகத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்துவது முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை குறைக்க உதவும். மேலும் சருமத்திற்கு புத்துணர்ச்சியை இது வழங்கும்.