12 OCT 2026
Credit: Getty
உலக அளவில் செயற்கை நுண்ணறிவு அம்சம் மிகவும் பிரபலாமாக உள்ளது. இந்த அம்சம் நாளுக்கு நாள் வியக்கதகு மாற்றங்களை அடைந்து வருகிறது.
செயற்கை நுண்ணறிவு அம்சம் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் நிலையில், தனிமனித வாழ்விலும் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.
இந்த நிலையில் தான், தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய பரிமாணமாக கூகுள் நிறுவனம் தற்போது அசத்தலான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, கூகுள் நிறுவனம் தனது ஜெமினி ஏஐ-ல் கால் ஃபார் மீ என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த அம்சம் மனிதர்களின் தலையிடல்கள் இல்லாமே ஒருவர் ஒருவரை தொடர்ப்புக்கொண்டு பேச வழிவகை செய்யும்.
அதாவது, இந்த அம்சம் மூலம் ஜெமினி ஏஐ உங்களுக்கு பதிலாக போன் கால்களை பேசும். அத்தகைய அசத்தல் அம்சம் தான் அது.
இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் இனி மிக எளிமையாக ஹோட்டல் அறைகள் புக் செய்வது முதல் கஸ்டமர் கேரிடம் பேசுவது வரை செய்யலாம்.
நீங்கள் என்ன பேச வேண்டுமோ அதனை ஜெமினி ஏஐ உங்களுக்கு பதிலாக போன் செய்து தானாகவே பேசும்.
இந்த வசதியை நீங்கள் மிக சுலபமாக பயன்படுத்த முடியும். அதாவது, ஜெமினி ஏஐ திறந்து அட் சிம்பில் போட்டு Call For Me என டைப் செய்ய வேண்டும்.
அதன் பிறகு நீங்கள் யாருக்கு பேச வேண்டும், அவரிடம் என்ன பேச வேண்டும் என்ற தகவ்லளை கொண்டுத்துவிட்டால் ஜெமினி ஏஐ மற்ற வேலைகளை பார்த்துக்கொள்ளும்.